தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஒப்புதல் அளிக்கப்பட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், எம்எல்ஏக்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில், ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசியது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக தஞ்சாவூர் மாநகராட்சியில் 51 வார்டுகள், பட்டுக்கோட்டை நகராட்சியில் 33 வார்டுகள், 20 பேரூராட்சிகளுக்குட்பட்ட 300 வார்டுகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், தஞ்சாவூர் மாநகராட்சியில் 95,261 ஆண்கள், 1,04,230 பெண்கள், 15 இதரர் என மொத்தம் 1,99,506 வாக்காளர்கள் உள்ளனர். பட்டுக்கோட்டை நகராட்சியில் 30,119 ஆண்கள், 32,340 பெண்கள், 18 இதரர் என மொத்தம் 62,477 வாக்காளர்கள் உள்ளனர். 20 பேரூராட்சிகளில் 1,04,626 ஆண்கள், 1,11,238 பெண்கள், 21 இதரர் என மொத்தம் 2,15,885 வாக்காளர்கள் உள்ளனர். மேலும், தஞ்சாவூர் மாநகராட்சியில் 196, பட்டுக்கோட்டை நகராட்சியில் 66, பேரூராட்சிகளில் 316 என மொத்தம் 578 வாக்குச்சாவடிகள் உள்ளன என்றார்.
கூட்டத்தில், எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago