விளாத்திகுளம் வைப்பாற்றில் வெள்ளம் :

விளாத்திகுளம் பகுதியில் கடந்த10 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் விளாத்திகுளம் வைப்பாற்றுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. வறண்டு கிடந்த வைப்பாற்றில் நேற்று மாலை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனை அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், விவசாயிகள் பார்த்து மகிழ்ச்சி அடை ந்தனர்.

விவசாயிகள் கூறும்போது, “ எங்கள் பகுதியின் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரம் வைப்பாறுதான். கோடையில் தண்ணீரின்றி வறண்டு காணப்பட்ட வைப்பாற்றில், தற்போது தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. விவசாயத்துக்கு ஏற்றவாறு மழை பெய்தால், இந்தாண்டு மகசூல் எடுக்க வாய்ப்பாக இருக்கும்” என்றனர்.

வைப்பாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், வி.வேடபட்டி தடுப்பணைக்கு வந்த புது வெள்ளத்தை மார்க்கண்டேயன் எம்எல்ஏ மலர் தூவி வரவேற்றார்.

கண்மாய் ஆய்வு

ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் வெள்ளாரம் கிராமத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் 92.26 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட கரிசல்குளம் கண்மாய் உள்ளது. மழையால் இக்கண்மாய் நிரம்பும் நிலையில் உள்ளது. கண்மாயின் முதல் மதகின் கரையின் பக்கவாட்டு பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இளைஞர்கள், விவசாயிகள் தினமும் மணல் மூட்டைகளை கொண்டு கரையை பலப்படுத்தி வருகின்றனர். மார்க்கண்டேயன் எம்எல்ஏ, பொதுப்பணித் துறை பொறியாளர்கள், வருவாய்த் துறையினர் சென்று கண்மாயை ஆய்வு செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE