குமரியில் கிராம அளவில் வேளாண் இயந்திர மையம் : வேளாண் வளர்ச்சி திட்ட கூட்டத்தில் வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராம அளவில் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகை மையம் அமைக்க வேண்டும் என வேளாண் வளர்ச்சி திட்ட கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நாஞ்சில் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தலைமையில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்துஅனைத்துத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில்தென்னங்கன்று விநியோகிப்பது, வரப்பு பயிராக துவரை, உளுந்து,பச்சைப்பயறு, தட்டைபயறு விநியோகம், கைத்தெளிப்பான், தார்பாலின், வேளாண் உபகரணங்கள் தொகுப்பு விவசாயிகளுக்கு விநியோகிப்பது குறித்து துறை சார்ந்தஅலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் திரவ உயிர் உரம்பயன்படுத்துதல், மண்வள மேலாண்மை, பயறுவகை பயிர்கள், அட்மா திட்ட செயல்பாடுகள் தொடர்பாக விவசாயிகளுக்கு பயிற்சிவழங்கவும், தென்னை சாகுபடியை மேம்படுத்துவது, தென்னைரூகோஸ் வெள்ளை ஈ மேலாண்மை, பனை அபிவிருத்தி திட்டம் குறித்தும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்குதல், கிராம அளவில் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் வாடகை மையம் அமைத்தல், அறுவடைக்கு பின் செய்நேர்த்தி தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை இயந்திரங்கள் வாடகை மையங்கள் மானியத்தில் வழங்கவும் வலியுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, வேளாண்மை இணை இயக்குநர் சத்தியஜோஸ், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வாணி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE