கடலூர் மாவட்டத்தில் கன மழையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேற்று மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர் மழையின் காரணமாக பரங்கிப்பேட்டை ஊராட்சிஒன்றியம் பூவாலை பகுதியில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதை மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் பார்வையிட்டு பாதிப்புகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.தொடர்ந்து மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியம் புவனகிரி - சாத்தப்பாடி நெடுஞ்சாலையில் உள்ள பெரிய ஏரி வடிகால் தரைப்பாலம் கனமழையினால் சேதமடைந்துள்ளதை பார்வை யிட்டு போக்குவரத்திற்கு
இடையூறு ஏற்படாமல் நடவடிக்கை மேற்கொள்ள நெடுஞ்சாலை துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம் கல்குணம் பகுதியில் செங்கால் ஓடை குறுக்கே அமைந்துள்ள கல்குணம் - திருவெண்ணைநல்லூர் இணைப்பு தலைப்பாலம் சேதமடைந்துள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago