திருப்பத்தூர் மாவட்டத்தில் - பண்ணை குட்டைகளைமாவட்ட ஆட்சியர் ஆய்வு :

திருப்பத்தூர் மாவட்டம் கதிரிமங்கலம் கிராமத்தில் ரூ.1.53 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு வரும் பண்ணைக்குட்டை பணிகளை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் திருப்பத்தூர் ஒன்றியத்தில் 169 விவசாயிகள், ஆலங்காயம் ஒன்றியத்தில் 81 விவசாயிகள், ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் 116 விவசாயிகள், கந்திலி ஒன்றியத்தில் 129 விவசாயிகள், மாதனூர் ஒன்றியத்தில் 124 விவசாயிகள், நாட்றாம்பள்ளி ஒன்றியத்தில் 98 விவசாயிகள் என மொத்தம் 717 விவசாயிகள் தனிநபர் பண்ணைக்குட்டைகள் அமைத்துக்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 717 விவசாயிகளுக்கு தனிநபர் பண்ணைக் குட்டைகள் அமைக்க 10 கோடியே 97 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. இப்பணிகளை, மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா மற்றும் திட்ட இயக்குநர் செல்வராசு உள்ளிட்ட அரசு அலுவலர்கள் நேற்று நேரில் பார்வையிட்டுஆய்வு செய்தனர்.

அப்போது, தனிநபர் பண்ணைக் குட்டையை விரைவாக முடிக்க வேண்டும் என விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா அறிவுறுத்தினார்.

அப்போது, உதவி திட்ட அலுவலர் விஜயகுமாரி, பிடிஓ பிரேம்குமார், சந்திரன், ஒன்றிய கவுன்சிலர் லலிதா, ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE