கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 18 உறுப்புக் கல்லூரிகள் மற்றும் 28 இணைப்புக் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளின் மூலம் 12 இளநிலை பட்டப்படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. நடப்பு கல்வியாண்டில் இளங்கலைப் படிப்புகளில் சேர மாணவ, மாணவிகளிடம் இருந்து கடந்த மாதம் 18-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஏறத்தாழ 40 ஆயிரத்துக்கும் மேலான மாணவ, மாணவிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். தரவரிசைப் பட்டியல் நவம்பர் 2-ல் (நேற்று) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படவில்லை. இதுதொடர்பாக வேளாண் பல்கலை. நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்,‘‘ நிர்வாகக் காரணங்களால், இளம் அறிவியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடும் நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தரவரிசைப் பட்டியல் வெளியீட்டுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும்’’ எனக் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago