ஜார்க்கண்டில் இருந்து கேரளா செல்லும் ரயிலில் கடத்தி வரப்பட்ட 9 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.
ஜாா்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழாவுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன் தினம் ஈரோடு ரயில் நிலையம் வந்தது. ரயில்வே பாதுகாப்புப் படை குற்றப்புலனாய்வுப் பிரிவு எஸ்.ஐ. கார்த்திகேயன் தலைமையிலான போலீஸார், அந்த ரயிலில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ரயில் பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த பையை சோதனையிட்டபோது, அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பையில் மறைத்து எடுத்துவரப்பட்ட 9 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர்
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரும் போலீஸார், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை கோவை மாவட்ட போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago