பயிர்களுக்கு இழப்பீடு : வேல்முருகன் வேண்டுகோள் :

By செய்திப்பிரிவு

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

டெல்டா மாவட்டங்களில் கனமழை காரணமாக 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கி வீணாகியுள்ளன. ஒரு ஏக்கரில் நெல் சாகுபடி மேற்கொள்ள குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரம் செலவாகும். இத்தொகையை பெரும்பாலான விவசாயிகள், வட்டிக்கு கடன் வாங்கித்தான் விவசாயத்தை மேற்கொண்டிருப்பார்கள். இச்சூழலில், நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி வீணாகியிருப்பது, அவர்களுக்கு பேரிழப்பாகும்.

எனவே, நீரில் மூழ்கிய விளைநிலங்களை ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்