ஆரோவில் பவுண்டேஷன் நிர்வாகக் குழு கூட்டத்தில் - தமிழக, புதுவை ஆளுநர்கள் பங்கேற்பு : வளர்ச்சி பணிகள், புதிய திட்டங்கள் தொடர்பாக ஆலோசனை

By செய்திப்பிரிவு

சர்வதேச நகரான ஆரோவில்லில் புதிய திட்டங்கள், வளர்ச்சி பணி கள் தொடர்பான ஆரோவில் பவுண் டேஷன் நிர்வாகக்குழு கூட்டத்தில் தமிழக, புதுச்சேரி ஆளுநர்கள் பங்கேற்று விவாதித்தனர்.

புதுவையை அடுத்த தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்ட எல்லையில் ஆரோவில் சர்வதேசநகரம் உள்ளது. இந்த நகரின்பணிகள் அனைத்தும் ஆரோவில் பவுண்டேஷன் மூலம் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. இதன் தலைவர் பதவிக்காலம் கடந்த ஆண்டு நவம்பருடன் முடிவடைந்தது. புதிய தலைவராக தமிழக ஆளுநர் ரவி கடந்த மாதம் நியமிக்கப்பட்டார். நிர்வாகக்குழு உறுப்பினர்களாக புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உட்பட 8 பேர் நியமிக்கப்பட்டனர்.

தமிழக ஆளுநரும், ஆரோவில் தலைவருமான ரவி தலைமையில் நேற்று ஆரோவில்லின் முதல் நிர்வாகக்குழு கூட்டம் நடந்தது.

இதில் புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டம் காலை தொடங்கி மதியம் வரை நடந்தது.

இக்கூட்டம் தொடர்பாக விசாரித்தபோது, "ஆரோவில் வளர்ச்சிப் பணிகள், புதியதிட்டங்கள், பாதுகாப்பு, கரோனா தடுப்பு நடவடிக் கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது" என்று குறிப் பிட்டனர்.

முன்னதாக தமிழக, புதுவை ஆளுநர்கள் ஆரோவில் அமைதி மையத்தை பார்வையிட்டனர்.

ஆரோவில் வளர்ச்சிப் பணிகள், புதியதிட்டங்கள், பாதுகாப்பு, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்