நேர்மை, சமத்துவம், பொறுப்புணர்வுடன் கூடிய - வெளிப்படைத்தன்மை மூலம் ஊழலை தவிர்க்கலாம் : என்எல்சி இந்தியா கண்காணிப்பு வார விழாவில் வலியுறுத்தல்

மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் வழிகாட் டுதலின் படி, கண்காணிப்பு விழிப்புணர்வு வார விழாவானது, என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சார்பில் கடந்த மாதம் 26-ம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் வரை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

‘75வது ஆண்டில் சுதந்திர இந்தியா நேர்மையுடன் இணைந்த தற்சார்பு’ என்ற மையக்கருத்தில் கொண்டாடப்பட்ட இந்நிகழ்வில், பொதுமக்களிடையே , ஊழல் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடத்தப்பட்டன.

ஒருவார காலம் கொண்டாடப்பட்ட இந்நிகழ்ச் சியின் நிறைவு விழா நேற்று முன்தினம் மாலை, நெய்வேலி கற்றல் மற்றும் மேம்பாட்டு மையத்தில் உள்ள யக்னேஸ்வரன் கலைஅரங்கில் நடை பெற்றது.

நிகழ்வுக்கு என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் ராக்கேஷ் குமார் தலைமை தாங்கினார். நிறுவன நிதித் துறை இயக்குநர் ஜெய்குமார் சீனிவாசன், கண்காணிப்புத்துறை தலைமை அதிகாரி சந்திரசேகர் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். கடத்த ஒரு வாரகாலம், இவ்விழா தொடர்பாக நடைபெற்ற பல்வேறு நிகழ்சிகளை சந்திரசேகர் ஒரு குறும்படம் மூலம் எடுத்துக் கூறினார்,

தொடர்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்ற வர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. என்எல்சி இந்தியா நிறுவன கண்காணிப்புத்துறையின் செய்தி மலரை தமிழக வனத்துறையின் கூடுதல் முதன்மை தலைமை அலுவலர் தீபக் வத்ஸவா மின்னணு வடிவில் வெளியிட முதல் பிரதியை ராக்கேஷ் குமார் பெற்றுக் கொண்டார்.

விழாவில் நிறைவு உறையாற்றிய தலைமை விருந்தினர் தீபக் வத்ஸவா, “அனைத்து குடிமக்களும் தங்கள் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மை, நேர்மை,சமத்துவம், பொறுப்புணர்வு மற்றும் சட்டப்படியான நெறி முறைகளை வெளிப்படுத்தும் போது, ஊழலைத் தவிர்க்க முடியும்.

குடிமக்களுக்கு தேசம் தான் பெரிது, ஊழியர்களுக்கு அவர்கள் பணியாற்றும் நிறுவனம் தான் பெரிது. குடிமக்களும் ஊழியர்களும் தனது தேசம் மற்றும் தனது நிறுவன நலனுக்காக தன்னால் இயன்ற பங்களிப்பினை வழங்க வேண்டும்” என்று கூறினார்.

முன்னதாக என்எல்சி இந்தியா நிறுவன கண் காணிப்புதுறையின் தலைமைப் பொது மேலாளர் எஸ்.குருசாமிநாதன் வரவேற்று பேசினார். பொது மேலாளர் இரணியன் நன்றி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE