தருமபுரி, கிருஷ்ணகிரியில் இன்று பட்டா திருத்த முகாம் தொடக்கம் :

By செய்திப்பிரிவு

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இன்று (3-ம் தேதி) முதல் பட்டா திருத்தம் முகாம் நடைபெறும் என்று ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

வாரம்தோறும் புதன், வியாழன் ஆகிய கிழமைகளில் ஒவ்வொரு வட்டத்திலும் உள்ள ஒரு வருவாய் கிராமம் என்ற அடிப்படையில் சிறப்பு முகாம் நடத்தி பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பணிகளை மேற்கொள்ளும்படி தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தருமபுரி மாவட்டத்தில் இன்று (3-ம் தேதி) 7 வட்டங்களிலும் தலா ஒரு வருவாய் கிராமம் வீதம் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நல்லனஅள்ளி , கோணங்கி அள்ளி, அஞ்சே அள்ளி, கருக்கன அள்ளி, பெரியான அள்ளி , நரிப்பள்ளி, கெரகோட அள்ளி ஆகிய பகுதிகளில் இம்முகாம்கள் நடக்க உள்ளன.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களிலும் உள்ள பகுதிகளில் இன்று கிருஷ்ணகிரி பதிமடுகு, ஓசூர் நகர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, பர்கூர் குட்டூர், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை பாவக்கல், அஞ்செட்டி பகுதிகளில் பட்டா திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.

எனவே, அந்தந்த பகுதி மக்கள் தங்கள் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு சிறப்பு முகாம்களை அணுகி தீர்வு தேடிக் கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்