நீட் தேர்வில் தாமரை பன்னாட்டு பள்ளி சாதனை :

மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த செம்படம்பர் மாதம் அகில இந்திய அளவில் நடைபெற்றது. இதில், தாமரை பன்னாட்டுப் பள்ளியின் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

தஞ்சாவூர் தாமரை பன்னாட்டு பள்ளி மாணவர் கவிநிலவன் 720-க்கு 690 மதிப்பெண்களையும், கும்பகோணம் தாமரை பன்னாட்டு பள்ளி மாணவன் நஃபீஸ் அகமது 618 மதிப்பெண்களையும் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றுள்ளனர்.

மேலும், நீட் தேர்வில் தாமரை பன்னாட்டு பள்ளியைச் சேர்ந்த 4 மாணவர்கள் 650 மதிப்பெண்களுக்கு மேலும், 13 மாணவர்கள் 600 மதிப்பெண்களுக்கு மேலும், 30 மாணவர்கள் 550 மதிப்பெண்களுக்கு மேலும், 54 மாணவர்கள் 500 மதிப்பெண்களுக்கு மேலும், 74 மாணவர்கள் 450 மதிப்பெண்களுக்கு மேலும், 94 மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேலும் பெற்று மருத்துவக் கல்லூரிகளில் பயில்வதற்கான தங்கள் சேர்க்கையை உறுதி செய்துள்ளனர்.

டெல்டா மாவட்டத்திலேயே நீட் தேர்வில் தாமரை பன்னாட்டு பள்ளிகளைச் சேர்ந்த மிக அதிகமான மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெற்று, பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், அதற்கு ஊக்கமளித்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் பள்ளித் தலைவர் வெங்கடேசன், துணைத் தலைவர் நிர்மலா வெங்கடேசன், பள்ளியின் முதுநிலை முதல்வர் ஜெய பத்ரிநாத் ஆகியோர் பரிசுகள் வழங்கி, பாராட்டினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE