சுவாமிநாத தம்பிரான் சுவாமி நினைவிடத்தில் மகேஸ்வர பூஜை :

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உள்ள சனி பகவானுக்கு தனி சன்னதியுடன் கூடிய தர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்கு தருமபுர ஆதீனத்தால் நியமிக்கப்பட்டு, 40 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டளை விசாரணையாக பணியாற்றியவர் ல சுவாமிநாத தம்பிரான் சுவாமிகள்.

இவரது காலத்தில் கோயிலுக்கு தங்க காக வாகனம் செய்யப்பட்டது. ஓடாத தேர் ஓடச் செய்யப்பட்டது. 1981-ம் ஆண்டு முதல், புதன்கிழமை தோறும் சமய சிந்தனை சொற்பொழிவு நிகழ்த்த ஏற்பாடு செய்தார். பல்வேறு சிறப்புகளைப் பெற்ற இவர், 1996-ம் ஆண்டு சிவப்பேறு எய்தினார். இதையடுத்து, ஆண்டுதோறும் அவரது நினைவிடத்தில் மாகேஸ்வர பூஜை நடத்தப்பட்டு வருகிறது.

இவரது, 25-வது ஆண்டு நினைவையொட்டி, திருநள்ளாறு தெற்கு வீதியில் உள்ள அவரது நினைவிடத்தில் நேற்று மகேஸ்வர பூஜை நடத்தப்பட்டது. இதையொட்டி, சமாதிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டன. தர்பாரண்யேஸ்வரர் கோயிலின் தருமபுரம் ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், அபிஷேகம், ஆராதனைகளை நடத்தினார். இதில் கோயில் அதிகாரிகள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE