வெயிலில் கருகி, மழையில் அழுகிய பயிர்கள் :

கனமழையால் கோவில்பட்டி அருகேஅயன் வடமலாபுரம் கிராமத்தில் சுமார் 600 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளம், வெள்ளைச் சோளம், கம்பு, குதிரைவாலி, உளுந்து, பாசி செடிகள் தண்ணீரில் மூழ்கின. சுமார் ஒரு அடி உயரத்துக்கு வளர்ந்த பயிர்கள் 2 நாட்களாக தண்ணீரில் மூழ்கி அழுகி விட்டதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் அ.வரதராஜன் கூறும்போது, “வடகிழக்கு பருவமழை கடந்த சில ஆண்டுகளாக பெய்து கெடுக்கிறது, இல்லையென்றால் பெய்யாமல் கெடுக்கிறது. கடந்த ஆண்டு பெய்த தொடர் மழையால் கடும் சேதம் ஏற்பட்டு விளைச்சல் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்தாண்டு அதனை ஈடுகட்டிவிடலாம் என்று எண்ணியிருந்தோம். ஆனால், 2 நாட்கள் பெய்த மழையில் பயிர்கள் அழுகிவிட்டன. ஒரு முறை விதைப்பு செய்ய ரூ.6,000 செலவாகிறது. ஏற்கெனவே இருமுறை விதைப்பு செய்து மழையில்லாததால், அவை கருகி, 3-வது முறையாக விதைப்பு செய்துள்ளோம். தற்போது மழையால் பயிர்கள் அழுகிவிட்டன. பாதிக்கப்பட்ட பயிர்களை கணக் கெடுத்து விவசாயிகளுக்கு நிவாரணம்வழங்க வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE