திருப்பத்தூர் அரசு மருத்துவ மனை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக சமீபத்தில் தரம் உயர்த்தப்பட்டது. மாவட்ட தலைமை மருத்துவமனை அந்தஸ்து பெற்றாலும், அதற்கான வசதிகள் இங்கு இல்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டு கின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, "திருப்பத்தூர் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்ட பிறகு அரசு தலைமை மருத்துவ மனையில் கூடுதல் கட்டிடம், உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இருந்தாலும், மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ வசதிகளோ, உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சையோ, பொது சுகாதாரம் உள்ளிட்டவை கிடைப்பதில்லை.
போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், மருத்துவ உதவியாளர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். 4 பேர் பணி செய்யக்கூடிய பிரிவில் ஒருவர் மட்டுமே இருப்பதால் நோயாளிகள் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளனர். மருத்துவமனை வளாகம் முழுவதும் குப்பைக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், உணவுக் கழிவுகள் ஆங்காங்கே குவிந்துள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. அதுமட்டு மின்றி சாலை விபத்து, தற்கொலை முயற்சி உள் ளிட்டவைகளால் பாதிக்கப்படும் நோயாளிகள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டால் போதிய மருத்துவ வசதி இல்லை எனக்கூறி தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இங்கிருந்து தொலை தூரத்துக்கு செல்லும் போது சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. எனவே, மாவட்ட அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ள திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அடிப் படை வசதியும், உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சையும் கொண்டு வர வேண்டும்" என்றனர்.
இந்த கோரிக்கையை தொடர்ந்து, திருப்பத்தூர் சட்டப் பேரவை உறுப்பினர் நல்லதம்பி அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மருத்துவமனை வளாகத்தில் ஆங்காங்கே குவிந்து கிடந்த குப்பைக்கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என நகராட்சி ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்.
பிறகு, ஒவ்வொரு வார்டாக சென்று அங்கு அனுமதிக்கப் பட்டிருந்த நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும், மருத்துவமனைக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க தமிழக அரசு தயாராக இருப்பதாகவும், காலிப் பணியிடங்களை விரைவில் நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்கும் என மருத்துவர்களிடம் அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago