தி.மலை மாவட்டத்தில் நீர்வரத்து கால்வாயில் - ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் : குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் தி.மலை மாவட்டம் கலசப்பாக்கம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் நேற்று நடைபெற்றது. ஊராட்சிகளின் உதவி இயக்குநர் டி.கே.லட்சுமி நரசிம்மன் தலைமை வகித்தார். வேளாண் உதவி இயக்குநர் (பொறுப்பு) கோபால கிருஷ்ணன், கலசப்பாக்கம் வட்டாட்சியர் ஜெகதீசன், வட்டார வளர்ச்சி அலுவலர் எழிலரசு, சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் மலர்கொடி மற்றும் துறை அதிகாரிகள், அலுவலர்கள் பங்கேற்றனர்.

குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் பேசும்போது, “கலசப் பாக்கம் வட்டத்தில் பட்டா மாறுதல் கேட்டு ஏராளமான விவசாயிகள் மனு அளித்துள்ளனர். அந்த மனுக்கள் மீது விரைவாக விசாரணை நடத்தி பட்டா மாற்றம் செய்து தர வேண்டும். கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க் கடன் வழங்க வேண்டும்.

யூரியா தட்டுப்பாடு உள்ளதால், பயிர் சாகுபடியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்கள் மூலமாக தட்டுப்பாடின்றி யூரியா மூட்டைகளை விற்பனை செய்ய வேண்டும். வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியியல் உட்பட வேளாண் சார்ந்த துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த கையேடுகளை விவசாயிகளுக்கு வழங்க வேண் டும்” என்றனர்.

பின்னர், விவசாயிகள் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுத்து பதிலளிக்க துறை அலுவலர்களுக்கு ஊராட்சிகள் உதவி இயக் குநர் டி.கே.லட்சுமி நரசிம்மன் உத்தரவிட்டார்.

இதேபோல், திருவண்ணா மலை, ஆரணி, செங்கம், வந்த வாசி, செய்யாறு, சேத்துப்பட்டு உட்பட அனைத்து வட்டங்களிலும் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.

அக்கூட்டங்களில் பங்கேற்ற விவசாயிகள், ‘நெல் சாகுபடியில் திருவண்ணாமலை மாவட்டம் முதன்மை மாவட்டமாக திகழ்கி றது. எனவே, மாவட்ட முழுவதும் அதிக எண்ணிக்கையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE