அரசு அனுமதித்துள்ள நேரத்தில் - பட்டாசுகளை வெடிக்க வேண்டும் : திருப்பத்தூர் ஆட்சியர் அறிவுறுத்தல்

அரசு அனுமதி வழங்கியுள்ள நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என திருப்பத் தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தீபாவளி திருநாளில் பட்டாசு ரகங்களை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று ஆகியவை மாசடைகிறது. ஒலி மற்றும் காற்று மாசினால் பலவிதமான நோய் தொற்று உண்டாகிறது. எனவே, பட்டாசு ரகங்களை திறந்த வெளியில் வெடிக்கவும்.

அரசு அறிவித்தபடி காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையி லும் பொதுமக்கள் பட்டாசு வெடிக்கலாம். அரசு அறிவித்த நேரத்தில் பசுமை பட்டாசுகளை பொதுமக்கள் வெடித்து மகிழ வேண்டும். அதேபோல, பாது காப்புடன் பட்டாசு ரகங்களை பொதுமக்கள் வெடிக்க வேண்டும்.

அதிக ஒலி எழுப்பக்கூடிய, தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். மருத்துவமனை, வழிப்பாட்டு தலங்கள், அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசு வெடிக்க வேண்டாம். குடிசைபகுதிகள், எளிதில் தீப்பற்றக்கூடிய இடங் களுக்கு அருகாமையில் பட்டாசு களை வெடிக்க வேண்டாம்.

சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதி வழங்கியுள்ள குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே வெடித்து மாசில்லா தீபாவளியை பொதுமக்கள் கொண்டாட வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE