கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைஊழியர்களுக்கு : ரூ.60 லட்சம் போனஸ் :

By செய்திப்பிரிவு

உதகை: இண்ட்கோ தொழிற்சாலைகளில்‌ பணிபுரியும்‌ தொழிலாளர்களுக்கு போனஸ்‌ அளிக்க இண்ட்கோசர்வ்‌ ரூ.60 லட்சம்‌ வழங்கியது.

இண்ட்கோசர்வ்‌ தொழிற்கூட்டுறவு நிறுவனம் தமிழக அரசால்‌ 1965-ம்‌ ஆண்டு உருவாக்கப்பட்டது. 30 ஆயிரத்துக்கும்‌ மேற்பட்ட சிறுதேயிலை விவசாயிகளை உள்ளடக்கிய, இந்தியாவின்‌ மிகப்பெரிய தேயிலை கூட்டுறவு இணையமாக இண்ட்கோ உருவெடுத்துள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள சிறு தேயிலை விவசாயிகளின்‌ தேவையை அறிந்து அவர்களின்‌ வாழ்வாதாரத்தைப்‌ பாதுகாக்கும்‌ நோக்கமுடன்‌ இண்ட்கோ செயல்பட்டு வருதிறது.

தற்போது, இதன்‌ கீழ்‌ 16 தொழிற்கூட்டுறவு தேயிலைத்‌ தொழிற்சாலைகள்‌ செயல்பட்டு வருகின்றன. இத்தொழிற்சாலைகளில்‌ ஏறக்குறைய ஆயிரத்துக்கும்‌ மேற்பட்ட தொழிலாளர்கள்‌ பணி புரிந்து வருகின்றனர்‌. இவர்களுக்கு அரசு ஆணைப்படி 2021-ம்‌ ஆண்டுக்கு 8.33 விழுக்காடு போனஸ்‌ மற்றும்‌ 1.67 விழுக்காடு கருணைத்தொகை வழங்கப்பட வேண்டும்‌. ஆனால்‌, தேயிலைத்தூள்‌ வியாபாரத்தில்‌ சமீப காலத்தில்‌ ஏற்பட்ட தொய்வு காரணமாகவும்‌, கடும்‌ விலை சரிவு காரணமாகவும்‌ தொழிலாளர்களுக்கு இண்ட்கோ தொழிற்சாலைகளால்‌ 2021-ம்‌ ஆண்டுக்கான போனஸ்‌ வழங்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டது.

இண்ட்கோசர்வ்‌ தலைமை செயல்‌ அலுவலர்‌ சுப்ரியா சாஹூ, ‘உறுப்பினர்கள்‌ அளிக்கும்‌ தரமான பசுந்தேயிலையிலிருந்து தரமான தேயிலைத்தூள்‌ தயாரித்து அதனை சந்தைக்கு அனுப்புவதில்‌ இண்ட்கோ தொழிற்சாலையின் தொழிலாளர்கள்‌ ஒவ்வொருவரின்‌ பங்கும்‌ மிகவும்‌ இன்றியமையாதது. நடப்பு ஆண்டில்‌ தேயிலைத்தூள்‌ விற்பனையில்‌ ஏற்பட்ட தொய்வு காரணமாகவும்‌, கடும்‌ விலை சரிவு காரணமாகவும்‌ இண்ட்கோ தொழிற்சாலைகளால்‌ அங்கு பணி புரியும்‌ தொழிலாளர்களுக்கு போனஸ்‌ வழங்க இயலாத சூழ்நிலையைக்‌ கருத்தில்‌ கொண்டு உடனடியாக இத்தொழிலாளர்களுக்கான ரூ.60 லட்சம்‌ போனஸ்‌ தொகையை இண்ட்கோசர்வ்‌ நிதியிலிருந்து வழங்க அனுமதி வழங்கப்படுதிறது. தொழிலாளர்கள்‌ தங்களின்‌ தொழிற்சாலை மூலம்‌ போனஸ்‌ பணத்தைப்‌ பெற்றுக்‌ கொள்ளலாம்’‌ எனத்‌ தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்