உதகை: நீலகிரி மாவட்டம், உதகை அருகே பேராரில் உள்ள தனியார் கட்டிடவியல் கல்லூரியின் 8-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழக அரசு தற்போது கொண்டு வந்துள்ள இல்லம் தேடி கல்வி திட்டம், திராவிட கல்வி திட்டம் என்பதில் மகிழ்ச்சி. துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் தலையீடு இருக்கக் கூடாது. தமிழக அரசுக்கு மட்டுமே துணைவேந்தர்களை நியமிக்க அதிகாரம் இருக்கிறது. கடந்த 5 ஆண்டு அதிமுக ஆட்சியில் துணைவேந்தர் நியமனத்தில் தமிழகத்தின் தன்மானத்தை அதிமுக அரசு அடகு வைத்து விட்டது. துணைவேந்தர் நியமனத்தில் தற்போதைய தமிழக அரசு தன்மானத்தை மீட்டெடுக்கும். முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை, பழிவாங்கும் நடவடிக்கை இல்லை. கோடநாடு உட்பட பல்வேறு விவகாரத்தில் பல உண்மைகள் விரைவில் வெளிவரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago