திருப்பூர்: ஊத்துக்குளி அருகே தளவாய்பாளையம் மோளக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் சுந்தரேசன் (58). சத்துணவு அமைப்பாளர். இவரது மகள் வனிதா. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த பாலச்சந்திரன் என்பவருக்கும் திருமணம் நடந்தது. பாலச்சந்திரனிடம் ரூ. 2லட்சத்தை சுந்தரேசன் வாங்கியுள்ளார். இதில் ரூ. 1 லட்சத்து 20 ஆயிரத்தை கொடுத்துள்ளார். எஞ்சிய ரூ. 80 ஆயிரத்தை பெறுவது தொடர்பாக இருவரிடமும் பிரச்சினை எழுந்தது. இதுதொடர்பாக கடந்த 2018-ம் ஆண்டு செப். 1-ம் தேதி ஏற்பட்ட வாக்குவாதத்தால், சுந்தரேசனை கத்தியால் பாலச்சந்திரன் குத்தியுள்ளார். இதில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து ஊத்துக்குளி போலீஸார் வழக்கு பதிந்து, பாலச்சந்திரனை கைது செய்தனர்.
இந்த வழக்கு, திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், பாலச்சந்திரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் நேற்று தீர்ப்பளித்தார். இதையடுத்து பாலச்சந்திரனை, கோவை மத்திய சிறையில் போலீஸார் அடைத்தனர். அரசு தரப்பு வழக்கறிஞர் கே.என்.சுப்பிரமணியம் ஆஜரானார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago