சேலம் வஉசி பூ மார்க்கெட்டில் நேற்று பூக்களின் விலை உயர்ந்தது.
சேலம் மாவட்டத்தில் பனமரத்துப்பட்டி, வீராணம், வலசையூர், சங்ககிரி, தாரமங்கலம், கன்னங்குறிச்சி, வாழப்பாடி, பருத்திக்காடு, ஓமலூர், காடையாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டு மல்லி, சாதி மல்லி, சம்பங்கி, அரளி, நந்தியாவட்டம் உள்ளிட்ட மலர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பகுதியில் இருந்து மலர்களை விவசாயிகள் சேலம் வஉசி பூ மார்க்கெட் (தற்காலிக மார்க்கெட் பழைய பேருந்து நிலையம் நேரு கலையரங்கத்தில் செயல்படுகிறது) கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். வஉசிபூ மார்க்கெட்டில் இருந்து பெங்களூரு, கோவை, நாமக்கல், கிருஷ்ணகிரி, ஓசூர், சென்னை, பட்டுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பூக்கள் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
தீபாவளி பண்டிகைக்கு சில நாட்கள் உள்ள நிலையில் நேற்று பூக்கள் விலை உயர்ந்தது.
குண்டு மல்லி கிலோ ரூ.700-க்கும், முல்லை ரூ.700, சாதி மல்லி ரூ.280, காக்கட்டான் ரூ.700, சம்பங்கி ரூ.20, அரளி ரூ.200, வெள்ளை மற்றும் செவ்வரளி ரூ.250, மஞ்சள் அரளி ரூ.220, நந்தியாவட்டம் ரூ.120-க்கும் விற்பனையாது. இது கடந்த நாட்களை விட விலை உயர்வு இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago