தமிழகம் முழுவதும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினர் மற்றும் உள்ளுர் போலீஸார், தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர மதுவிலக்கு சோதனை நடத்துமாறு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.
அதன்பேரில் கடந்த 4 மாதங்களில் மட்டும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, ரூ.1.50 கோடி மதிப்பிலான 3 லட்சம் லிட்டர் கள்ளச்சாராயம், ரூ.75 லட்சம் மதிப்பிலான சாராய ஊறல்கள் கைப்பற்றப்பட்டு, அழிக்கப்பட்டுள்ளன.
மேலும், கைதானவர்களிட மிருந்து ரூ.10 கோடி மதிப்பிலான வெளிநாட்டு மதுபான வகைகளும் கைப்பற்றப்பட்டு, அழிக்கப்பட்டுள்ளன. இதுதவிர, ரூ.40 லட்சம் மதிப்பிலான எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கள்ளச்சாராயம் மற்றும் சட்டவிரோத மது விற்பனைக்காக பயன்படுத்தப்பட்ட 4 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து மது கடத்தல் குற்றங்களில் ஈடுபட்டதாக 150 பேர் கைது செய்யப்பட்டு, குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட் டுள்ளனர்.
இதற்கிடையே, தீபாவளி, கார்த்திகை என தொடர்ந்து விழாக்காலங்கள் வருவதால், மதுபானக் கடத்தல் மற்றும் பதுக்கல் அதிக அளவில் நடைபெறும். எனவே, மதுவிலக்கு குற்றங்களைத் தடுக்க, வாகன சோதனை, மதுவிலக்கு சோதனை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago