வருமானவரித் துறை மற்றும் மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் இணைந்து, ‘வரி நிர்வாகத்தின் மாறி வரும் சூழ்நிலை’ என்ற தலைப்பில் நேற்று சென்னையில் கருத்தரங்கம் நடைபெற்றது. மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் தலைவர் சி.வி.சுப்பாராவ் வரவேற்புரை ஆற்றினார். வருமானவரித் துறை தலைமை ஆணையர் (டிடிஎஸ்) ஆர்.ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது:
நாட்டில் உள்ள அனைவரிடமும் இருந்து வரி வசூல் செய்ய முடியாது. நாடாளுமன்றத்தில் அனுமதி வழங்கப்பட்ட நபர்களிடம் இருந்துதான் வசூலிக்க முடியும்.வரிவசூல் என்பது அரசின் கடமைகளில் முக்கியமான ஒன்றாகும். வரி வசூல் செய்யப்பட்டு அது நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத் தப்படுகிறது.
பாலங்கள் கட்டுவது, முப்படைகளின் வளர்ச்சி உள்ளிட்டவற்றுக்கு வரிப் பணம் பயன்படுத்தப் படுகிறது. பண்டைய காலத்தில் வரி வசூல் செய்வது என்பது மிகவும் கடினமான, சவாலான பணியாக இருந்தது.
எங்கெல்லாம் வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படு கிறதோ, அங்கு வரிவசூல் செய்வதற்கான முகாந்திரம் உள்ளது. வரிவசூல் செய்வது என்பது தொடக்கத்திலேயே செய்ய வேண்டும். அதேபோல், வரி செலுத்துபவர்கள் வரி வலைக்குள் வந்து செலுத்த வேண்டும். வரி வலைக்கு வெளியே செலுத்தக் கூடாது. வளர்ந்து வரும் நாடானஇந்தியாவில் வரிவசூல் செய்வதற்கான மிகப் பெரிய வாய்ப்பு உள்ளது என்றார்.
கருத்தரங்கில் பங்கேற்றவர்கள், வரி தொடர்பான பல்வேறு சந்தேகங்களை எழுப்பினர். அதற்கு அதிகாரிகள் விளக்கமான பதில் அளித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago