57 வணிகவரி துணை ஆணையர்கள் இடமாற்றம் :

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் வணிகவரி துணைஆணையர்கள் 57 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசின் வணிகவரித் துறை செயலாளர் பி.ஜோதி நிர்மலாசாமி நேற்று உத்தரவிட்டுள்ளார்.

சென்னை வடக்கு மண்டலம் 1 வணிகவரி துணை ஆணையர் கே.அருண்குமார், கோவைக்கும், சென்னை வடக்கு மண்டலம் -3 துணை ஆணையர் ஏ.லட்சுமிபதி விற்பனைவரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்துக்கும் மாற்றப்பட் டுள்ளனர். அதுபோல சென்னை யில் வணிகவரி துணை ஆணையர்களாக பணியாற்றி வரும்ஆர்.சத்தியதிலகம், திண்டுக்கல்லுக்கும், எஸ்.மாரியப்பன், வணிகவரி நுண்ணறிவு பிரிவுக்கும், ஜி.நெய்தாலி கோவைக்கும், ஏ.ஜெயசாந்தி, வணிகவரி மறுஆய்வு, மேல்முறையீடு பிரிவுக்கும், டி.லீனா, விழுப்புரத்துக்கும், எஸ்.ஜெயா, நாமக்கல்லுக்கும் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.

மொத்தமாக வணிகவரி துணைஆணையர்கள் 57 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்