தண்ணீர் பற்றாக்குறையை போக்க - நடமாடும் உப்புநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க புதிய தொழில்நுட்பம் : இஸ்ரேஸ் துணைத் தூதருடன் தமிழிசை கலந்துரையாடல்

By செய்திப்பிரிவு

நடமாடும் உப்புநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பதற்கான தொழில்நுட்பத்தை புதுச்சேரிக்கு வழங்குவது தொடர்பாக தென் இந்தியாவுக்கான இஸ்ரேஸ் துணைத் தூதரிடம் துணைநிலை ஆளுநர் தமிழிசை கலந்துரையாடினார்.

பெங்களூரு அலுவலகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தென் இந்தியாவிற்கான இஸ்ரேல் துணைத் தூதர் ஜொனாதன் ஜட்கா நேற்று துணைநிலை ஆளுநர் தமிழிசையை புதுச்சேரி ராஜ்நிவாஸில் சந்தித்துப் பேசினார். சந்திப்பின்போது, இஸ்ரேல் - இந்தியா நாடுகளுக்கு இடையிலான நல்லுறுவு, பண்பாட்டுத் தொடர்புகள், பழந்தமிழ் மற்றும் ஹீப்ரு மொழிகளுக்கு இடையில் உள்ள சொல் பரிமாற்றங்கள் குறித்து கலந்துரையாடினர். இஸ்ரேல் நாட்டிற்கு பயணம் செய்த முதல் பிரதமர் நரேந்திர மோடி என்பதை துணைநிலை ஆளுநர் நினைவு கூர்ந்தார்.

இச்சந்திப்பு தொடர்பாக துணைநிலை ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தண்ணீர் பற்றாக்குறையை போக்க நடமாடும் உப்புநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பதற்கான தொழில்நுட்பம், சொட்டு நீர்ப்பாசன தொழில்நுட்பம் ஆகியவற்றை புதுச்சேரிக்கு வழங்குவது தொடர்பாக ஆளுநர் பேசினார். புதுச்சேரி மற்றும் காரைக்காலில் புதிய தொழில்நுட்ப உதவியோடு புதிய தொழிற்சாலைகள் அமைப்பது, புதுச்சேரியில் இயற்கை வளமும் மனித வளமும் நிறைந்திருப்பதால் புதுமையான திட்டங்கள் செயல்படுத்துவது, இந்திய மருத்துவமுறையை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை செயல்படுத்த உதவுவது ஆகியவை குறித்து கலந்துரையாடினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து சட்டப்பேரவை சென்ற ஜொனாதன் ஜட்கா, முதல்வர் ரங்கசாமியையும் சந்தித்து பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்