வரதட்சணை தடுப்பு ஆலோசனை வாரிய நிர்வாகிகள் நியமனம் :

By செய்திப்பிரிவு

புதுவை மகளிர் மேம்பாட்டு துறையின் கீழ் வரதட்சணை தடுப்பு ஆலோசனை வாரியம் அமைக்கப்பட்டது.

12 ஆண்டுக்களுக்கு முன் இந்தவாரியத்துக்கு நிர்வாகிகள் நியமிக் கப்பட்டனர். அதன்பின் நிர்வாகிகள் நியமிக்கப்படவில்லை. இப்போது மீண்டும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாரியதலைவராக வித்யா ராம்குமார்,உறுப்பினர்களாக நோணாங் குப்பம் லோகநாதன், புதுவை காந்திவீதி கலைமகள்அலிஸ், எல்லை பிள்ளைச் சாவடி அன்பு செந்தில், ரெட்டியார் பாளையம் கணேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். காரைக் கால் மாவட்ட வரதட்சணை ஆலோசனை வாரிய தலைவராக மேரி தெரசாரோக் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த குழு 2026-ம் ஆண்டுவரை 5 ஆண்டுகள் பதவியில்இருக்கும். குடும்ப வன்முறை,வரதட்சணை வழக்குகள் பிரிக்கப்படாமல் காவல்நிலையத்தில் வழக்குப் பதியப்படுகிறது. இந்த சிக்கல்களை தடுக்க வழக்குகள் ஆலோசனை வாரியத்தின் முன் வைக்கப்பட்டு பரிசீலனை செய்யப்படும். இந்தக் குழு பரிந்துரையின்படி காவல்நிலையத்தில் வழக்குப் பதியப்படும்.

இந்த குழு 2026-ம்ஆண்டு வரை 5 ஆண்டுகள் பதவியில்இருக்கும். வழக்குகள் ஆலோசனை வாரியத்தின் முன் வைக்கப்பட்டு பரிசீலனை செய்யப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்