சிதம்பரத்தில் தமிழ்நாடு நாள் கொண்டாட்டம் :

By செய்திப்பிரிவு

சிதம்பரத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டது.

ஆண்டுதோறும் 1956-ம்ஆண்டு நவம்பர் 1ம் தேதி மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்ட நாளை தமிழகப் பெருவிழாவாக தமிழ்த்தேசியப் பேரியக்கம் கொண்டாடி வருகிறது. அதன்படி நேற்று காலை சிதம்பரம் காசுக்கடைத்தெருவில் நடைபெற்ற விழாவிற்கு தமிழ்த்தேசிய பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் மற்றும் தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச்செயலாளர் குபேரன் தலைமை தாங்கினார். மணிவண்ணன் முன்னிலை வகித்தார். தமிழ்த்தேசிய பேரியக்கக் கொடியை பேரியக்க நிறுவனர் தேவராசன் ஏற்றி வைத்தார். இதனை தொடர்ந்து சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள மொழிப்போர் தியாகி ராஜேந்திரன் சிலைக்கு பேரியக்க நிர்வாகி வேந்தன் சுரேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து தமிழர் தற்காப்பு பயிற்சிப் பள்ளி மாணவர்களின் சிலம்பக்கலை அரங்கேற்றப்பட்டது. பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.

நகர செயலாளர் எல்லாளன், பிரபாகரன், மகளிர் அணி பொறுப்பாளர் தில்லைக்கரசி, தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் சுப்ரமணிய சிவா, நிர்வாகிகள் அரங்கநாதன், சிலம்பம் சக்திவேல்,பவித்திரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்