மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை :

By செய்திப்பிரிவு

வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வடக்கு, வடமேற்குத் திசையை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும்.

இதன் காரணமாக தமிழகத்தில் குமரி, நெல்லை, தூத்துக்குடியில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், மதுரை, ராமநாதபுரம், தென்காசி மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரி வித்துள்ளது.

இதனால் ராமநாதபுரம் மாவட் டத்தில் பாக். ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் ஆகிய விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்ல நேற்று அனுமதி டோக்கன் வழங்கப்படவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்