சிவகங்கை அருகே சேறும் சகதியுமான சாலை : குழந்தைகள் வழுக்கி விழுந்ததால் பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் மறுப்பு

சிவகங்கை அருகே சேறும், சகதியுமாக மாறிய சாலையில் குழந்தைகள் வழுக்கி விழுந்தனர். இதனால் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

சிவகங்கை அருகே வேளாரேந்தல்-சூராணம் சாலையில் இருந்து வடக்கு மாரந்தை, தெற்கு மாரந்தை வழியாக மாதவநகர்-சூராணம் சாலை வரை 1.5 கி.மீ.-க்கு சாலை உள்ளது. இச்சாலையில் மாரந்தை தொடக்கப் பள்ளி உள்ளது.

இங்கு மாணவர்கள் எண்ணிக்கை 10-க்கும் கீழே குறைந்த நிலையில் அக்கிராம மக்கள் முயற்சியால் தற்போது 26 மாணவர்கள் படிக்கின் றனர். மேலும் பள்ளி அமைந்துள்ள சாலை பல ஆண்டுகளாக சீரமைக்காததால் மிகவும் மோசமாக உள்ளது. இதையடுத்து சாலையைச் சீரமைக்க அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலி யுறுத்தி வருகின்றனர்.

தற்போது அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலை சேறும், சகதியுமாக மாறியுள்ளது. இந்நிலையில் நேற்று பள்ளி திறந்த நிலையில் பள்ளிக்கு சென்ற குழந்தைகளில் சிலர் சேறு, சகதியில் வழுக்கி விழுந்தனர். இதையடுத்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் மறுத்துள்ளனர்.

இதுகுறித்து மாரந்தை ஊராட்சித் தலைவர் திருவாசகம் கூறுகையில், ‘ சாலைப் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்து திடீரென ரத்து செய்து விட்டனர். விரைவில் சாலைப் பணியைத் தொடங்க அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன்,’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE