கட்டுரை, கடிதம் எழுதும் போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு :

By செய்திப்பிரிவு

திருவாரூர்: தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் 60-வது ஆண்டை கொண்டாடும் வகையில், பகத்சிங் பிறந்தநாளையொட்டி 'விடுதலைப் போரில் பகத்சிங்' என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியிலும், பெரியார் பிறந்தநாளையொட்டி நடத்தப்பட்ட 'அன்புள்ள எம் தந்தையே' எனும் தலைப்பிலான கடிதம் எழுதும் போட்டியிலும் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சுந்தரக்கோட்டையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, செங்கமலத்தாயார் மகளிர் கல்லூரி தாளாளர் வி.திவாகரன் தலைமை வகித்தார். கலை இலக்கியப் பெருமன்ற மாநிலப் பொதுச் செயலாளர் இரா.காமராசு சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில், மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற கல்லூரி மாணவிகள் ஞா.கமலி, ம.ஹேமா மற்றும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன. இதில், கலை இலக்கியப் பெருமன்ற மாவட்டச் செயலாளர் நீடாமங்கலம் சந்திரசேகர், மன்னார்குடி கிளைத் தலைவர் தாரகை.செல்வகுமார், செயலாளர் கவிஞர் க.தங்கபாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்