நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மொத்த வாக்காளர்கள் 26,94,087 :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 1.1.2022-ம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் நடைபெற உள்ளது. இதற்காக, திருநெல்வேலியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வரைவு வாக்காளர் பட்டியலை, மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு வெளியிட்டார். அதன்படி, மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் 13,63,458. ஆண்கள் 6,67,074, பெண்கள் 6,96,271, இதர வகையினர் 113. மாவட்டத்தில் மொத்தம் 1,483 வாக்குச்சாவடிகள் உள்ளன.

தென்காசி

தென்காசி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் கோபால சுந்தரராஜ் வெளியிட்டார். அதன்படி, தென்காசி மாவட்டத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 13,30,629. ஆண்கள்: 6,51,181. பெண்கள் 6,79,413. இதரர் 35. வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்க்க மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள, தமிழகம் முழுவதும் நவம்பர் 13, 14, 27, 28 ஆகிய நான்கு நாட்களில் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. தேர்தல் ஆணையத்தின் இணையதளம் www.nvsp.in மூலமும் விண்ணப்பிக்கலாம். இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 5-ம் தேதி வெளியிடப்படும்.

சட்டப்பேரவை தொகுதி வாரியாக வாக்காளர் விவரம்:தொகுதி ஆண்கள் பெண்கள் இதரர்மொத்தம்திருநெல்வேலி 1,42,903 1,49,612 64 2,92,579அம்பாசமுத்திரம் 1,18,978 1,26,225 4 2,45,207பாளையங்கோட்டை 1,34,344 1,39,800202,74,164நாங்குநேரி 1,37,2161,42,194 14 2,79,421ராதாபுரம் 1,33,6331,38,440 142,72,087

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்