பழங்கால வேளாண் கருவிகளை ஒப்படைக்க அழைப்பு :

கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இரா.சித்ராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘தமிழக அரசின் சார்பில், மரபு சார் வேளாண் அருங்காட்சியகத்தில் வைப்பதற்காக, பழங்காலத்தில் விவசாயிகள் பயன்படுத்திய வேளாண் கருவிகள், வேளாண் தொடர்புடைய பொருட்கள், நாட்டுப்புற விவசாய பாடல்கள், ஓவியங்கள், பாரம்பரிய நெல், சிறுதானிய ரகங்கள் சேகரிக்கப்படுகின்றன. விவசாயிகள் தங்களிடம் உள்ள மரபுசார் வேளாண் கருவிகளையும், பாரம்பரிய பயிர் ரகங்களையும் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்கள் மூலம் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் 31-ம் தேதி (இன்று) ஒப்படைக்கலாம்’’ எனக் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE