நெடுஞ்சாலைத் துறை பணிகள் முன்னேற்றம் குறித்து அமைச்சர் எ.வ.வேலு சென்னை தலைமைச் செயலகத்தில் ஆய்வு செய்தார். இதில் அவர் பேசியதாவது:
கேளம்பாக்கம், திருப்போரூர் புற வழிச்சாலைப் பணி, ராஜீவ் காந்தி சாலையில் உள்ள சுங்கச்சாவடி கட்டு மானங்களை நீக்கும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். பழைய மகாபலிபுரம் சாலையில் 5 பாலங்களை விரைவாக அமைக்க வேண்டும்.
எண்ணூர், தச்சூர், தாமரைப்பாக்கம், திருவள்ளூர், பெரும்புதூர், சிங்க பெருமாள் கோவில், மகாபலிபுரம் வரை செல்லும் சென்னை எல்லை சாலைப் பணிகள் விரைவில் தொடங்க வேண்டும்.
சென்னை மாநகர எல்லைக்குள் நடை பெறும் பெருங்களத்தூர், மேடவாக்கம் மேம்பாலப்பணிகள், கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூர் முதல் அக்கரை வரை நிலம் கையகப்படுத்தும் பணிகள் விரைவாக முடிக்க வேண்டும். சென்னை- கன்னியாகுமரி சாலைப்பணிகளை துரிதமாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு அனைத்து திட்டங்களுக்குத் தேவையான நிதியை உடனுக்குடன் வழங்கி வருகிறது. அலுவலர்கள் தீவிர நடவடிக்கை எடுத்து டிசம்பர் மாத இறுதிக்குள் 70 சதவீத பணிகளை முடிக்க வேண்டும். கட்டுமானப் பொருட்களின் தரம் குறித்து பரிசோதனை செய்வதற்காக ஏற்படும் காலதாமத்தை தவிர்க்க வேண்டும்.
உலகத்தரம் வாய்ந்த பிரத்யேக பரிசோதனைக் கூடங்களை அமைக்க வேண்டும். அதற்கான பயற்சிகளை வழங்க வேண்டும். வெளிநாடுகளில் உள்ள தர பரிசோதனை மையங்களை பார்வையிட்டு அதேபோன்ற மையங்களை தமிழகத்தில் அமைக்க வேண்டும்.
இவ்வாறு நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் அறிவுறுத்தினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago