சிவகங்கை அருகே - ஒரே நாளில் 4 மின்மாற்றிகளை பொருத்திய மின் ஊழியர்களுக்கு கிராம மக்கள் பாராட்டு :

By செய்திப்பிரிவு

சிவகங்கை அருகே கொட்டும் மழையில் ஒரே நாளில் 4 மின் மாற்றிகளை பொருத்திய மின் ஊழியர்களை கிராம மக்கள் பாராட்டினர்.

சிவகங்கை அருகே வாணியங் குடி ஊராட்சி சமத்துவபுரம் மற்றும் முல்லை நகர், சிதம்பரம் நகர், ஆக்ஸ்போர்டு நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் குறை மின்னழுத்தத்தால் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 4 இடங்களிலும் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சகாயராஜ் தலைமையில், செயற்பொறியாளர் முருகையன், உதவி செயற்பொறியாளர் காத்த முத்து, உதவி பொறியாளர் அசோக்குமார் உள்ளிட்டோர் கொட்டும் மழையிலும் ரூ.31 லட்சத்தில் புதிய மின்மாற்றிகளை பொருத்தினர்.

இதையடுத்து மின்வாரிய அதிகாரிகளை வாணியங்குடி ஊராட்சித் தலைவர் புவனேஸ்வரி சுரேஷ் தலைமையில் கிராம மக்கள் பொன்னாடை போர்த்தி பாராட்டினர். இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் ரூ.273 கோடியில் 252 புதிய மின் மாற்றிகள் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மே 7-ம் தேதியில் இருந்து இதுவரை 105 மின்மாற்றிகள் மாற்றப்பட்டுள்ளன. இதில் சிவகங்கை நகரில் மட்டும் 10 மின்மாற்றிகள் பொருத்தப்பட்டன. வடகிழக்கு பருவமழையினால் மின்கட்டமைப்பில் ஏற்படும் இடர்ப்பாடுகளை விரைந்து சீரமைத்து தடையற்ற மின்சாரம் வழங்க பேரிடர் மேலாண்மை மின் சீரமைப்புக்குழு அமைக்கப் பட்டுள்ளது, என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்