பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்து ராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா மற்றும் குரு பூஜை கடந்த 3 நாட்களாக நடைபெற்றது.
விழாவின் 3-ம் நாளான நேற்று முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பி.மூர்த்தி, பழனி வேல் தியாகராஜன், சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட அமைச்சர்கள் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து பசும்பொன் செல்லும் வழியில் மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மருதுபாண்டியர்களின் சிலைகளுக்கும் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனி வாசன், நத்தம் விசுவநாதன், காம ராஜ், செல்லூர் ராஜு, ஆர்பி. உதயகுமார், விஜயபாஸ்கர், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏ ஆகியோர் கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அமமுக அமைப்புச் செயலாளர் இ.மகேந்திரன், ஜெயலலிதா பேரவை செயலாளர் கா.டேவிட் அண்ணாத்துரை உள்ளிட்டோர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அவரது மகன் துரை வையாபுரி, மதுரை எம்.பி சு.வெங்கடேசன், தெற்குத் தொகுதி எம்எல்ஏ பூமிநாதன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.கே.ராஜேந்திரன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா, நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ சர வணன், மதுரை மாவட்ட காங்கி ரஸ் தலைவர் கார்த்திகேயன் உள்ளிட் டோர் கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதேபோல் பல்வேறு சமூக அமைப்புகள், இளைஞர்கள் தேவர் சிலைக்கு மரியாதை செய் தனர். ஆயிரக்கணக்கான பெண் கள் பால்குடம், முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்து தேவர் சிலைக்கு பாலாபிஷேகம் செய் தனர். கோரிப்பாளையத்தை ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீ ஸார் பாதுகாப்புப் பணியில் ஈடு பட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago