உலக சேமிப்பு தினத்தையொட்டி டெபாசிட் சேகரிப்பு மற்றும் நிதியியல் கல்வி விழிப்புணர்வு முகாம் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி தலைமை தாங்கினார். வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு ரூ.32.26 லட்சம் மதிப்பில் பல்வேறு கடனுதவிகளை வழங்கினார்.
முகாமில், சேமிப்பதன் அவசியம், பாதுகாப்பான முதலீடு, தவணை தேதியில் கடனை திருப்பி செலுத்துவதால் ஏற்படும் நன்மைகள், மத்திய அரசின் விபத்து காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டங்கள், ஏடிஎம் கார்டை பாதுகாப்பாக பயன்படுத்துதல், ரொக்கம் இல்லா பணப்பரிவர்த்தனை போன்றவை குறித்து விளக்கிக் கூறப்பட்டது.
தொடர்ந்து ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 5 நபர்கள், சம்பத்நகர் கிளையில் 3 நபர்கள் என மொத்தம் 20 நபர்கள் ரூ.1.4 கோடி நிரந்தர டெபாசிட் செய்தனர். அந்தியூர் எம்பி செல்வராஜ், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் கிருஷ்ணராஜ், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் நவமணிகந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago