விதி மீறல் கண்டறியப்பட்டால் பட்டாசு கடைக்கு ‘சீல்’: ஆட்சியர் எச்சரிக்கை :

By செய்திப்பிரிவு

சேலம்: ‘சேலம் மாவட்டத்தில் விதி முறை மீறி பட்டாசு கடைகள் செயல்படுவது கண்டறியப்பட்டால், கடைக்கு ‘சீல்’ வைக்கப்படும்,’ என ஆட்சியர் கார்மேகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்கள் உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு வாகனத்தை ஆட்சியர் கார்மேகம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த வாகனம் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிக்குச் சென்று போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும் கள்ளச்சாராயம் உட்கொள்வதால் ஏற்படும் உடல் நலக்கேடுகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும்.

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் கார்மேகம் கூறியதாவது:

பட்டாசு விற்பனையை மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மாவட்ட வருவாய் அலுவலர் பட்டாசு கடைகளுக்கான உரிமத்தை வழங்கி வருகிறார். ஆர்டிஓ தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு, பட்டாசு கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பட்டாசு கடைகள் விதிமுறை மீறி செயல்படுவதைக் கண்டறிந்தால், கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும். தீபாவளி பண்டிகையில் கரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் சமூக இடைவெளி கடைப் பிடித்தல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட நோய் தடுப்பு நடவடிக்கையை கடைப்பிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்