தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தஞ்சாவூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் பள்ளி வாகனங்களை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். தஞ்சாவூர், பட்டுக்கோட்டை பகுதிகளில் உள்ள 101 பள்ளிகளின் 563 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வின்போது எஸ்.பி ரவளிப்ரியா, வட்டார போக்குவரத்து அலுவலர் அறிவழகன், மோட்டார் வாகன ஆய்வாளர் அனிதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சிவகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதேபோல, கும்பகோணம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 141 பள்ளிகளைச் சேர்ந்த 74 வாகனங்கள் அரசு ஆடவர் கல்லூரிக்கு வரவழைக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டன. மாவட்டக் கல்வி அலுவலர் சண்முகநாதன் தலைமையில், வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago