பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சைக்கிள் பேரணி :

By செய்திப்பிரிவு

பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையேற்றத்தைக் கண்டித்து திரு வாரூர், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர், திருசசி மாவட்டங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று சைக் கிள் பேரணி, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையேற்றத்தைக் கண்டித்தும், விலை உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று சைக்கிள் மற்றும் மாட்டுவண்டி பேரணி நடைபெற்றது. நாகை எம்.பி எம்.செல்வராஜ், மாவட்டச் செயலாளர் வை.சிவபுண்ணியம், விவசாய சங்க மாவட்டச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கோட்டூர் பேருந்து நிலைய பகுதியில் நடைபெற்ற சைக்கிள், மாட்டுவண்டி பேரணியில் திருத் துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து, கோட்டூர் ஒன்றியக் குழுத் தலைவர் மணிமேகலை, மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் அம்புஜம், ஒன்றியச் செயலாளர் செந்தில்நாதன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் ஜெயராமன், விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் பரந்தாமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மன்னார்குடியில் நடைபெற்ற பேரணியில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் வை.செல்வராஜ், ஒன்றியச் செயலாளர் வீரமணி, இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலாளர் துரை.அருள்ராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதேபோல, திருத்துறைப்பூண்டி யிலும் சைக்கிள் பேரணி நடைபெற் றது.

தஞ்சாவூரில்...

தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாநகரச் செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் முத்து.உத்தி ராபதி, பொருளாளர் என்.பாலசுப்பிரமணியன், ஏஐடியுசி மாநிலச் செயலாளர் சி.சந்திரகுமார், மாவட் டத் தலைவர் வெ.சேவையா, அரசுப் போக்குவரத்துக் கழக மாநில துணைத் தலைவர் துரை.மதிவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில், மாநகர பொருளாளர் கே.மாரிமுத்து நன்றி தெரிவித்தார்.

பெரம்பலூரில்...

பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணா புரத்தில் நடைபெற்ற சைக்கிள் பேரணிக்கு வேப்பந்தட்டை ஒன்றி யச் செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். இப்பேரணி, கிருஷ்ணாபுரம் ஜங்ஷனில் இருந்து அரும்பாவூர் பாலக்கரை வரை நடைபெற்றது. இதேபோல, குன்னம் பேருந்து நிலையத்தில் தொடங்கி வட்டாட்சியர் அலுவலகம் அருகே நிறைவடைந்த சைக்கிள் பேரணிக்கு வேப்பூர் ஒன்றியச் செயலாளர் கலியபெருமாள் தலைமை வகித்தார்.

அரியலூரில்...

அரியலூர் மாவட்டம் ஏலாக் குறிச்சியில் நடைபெற்ற சைக்கிள் பேரணியை இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளர் ஜி.ஆறு முகம் தலைமை வகித்து, தொடங்கி வைத்தார். இதில், துணைச் செயலா ளர் பன்னீர் செல்வம், மாவட்டக் குழு உறுப்பினர் மருதமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏலாக்குறிச்சி கடைவீதியில் புறப்பட்ட பேரணி சுள்ளங்குடி, விழுப்பணங்குறிச்சி, திருவெங்கனூர் வழியாக திருமா னூரில் நிறைவடைந்தது.

புதுக்கோட்டையில்...

புதுக்கோட்டையில் நடைபெற்ற சைக்கிள் பேரணியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மு.மாதவன் தொடங்கி வைத்தார். இதேபோல, கறம்பக் குடியில் ஒன்றியச் செயலாளர் ஏ.சேசுராஜ் தலைமையில் நடைபெற்ற பேரணியில் முன்னாள் மாவட்டச் செயலாளர் த.செங் கோடன் கலந்து கொண்டார். மேலும், அறந்தாங்கி, கந்தர்வக்கோட்டை, கீரனூர், அன்னவாசல், ஆலங்குடி உள்ளிட்ட இடங்களிலும் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

கரூரில்...

கரூரில் நடைபெற்ற சைக்கிள் பேரணி, ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் எம்.ரத்தினம் தலைமையில் துணைச் செயலாளர் மோகன் குமார், நிர்வாகக் குழு தங்கவேலு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கரூர் ஆர்எம்எஸ் அலுவலகம் முன்பு தொடங்கிய பேரணி, ஜவஹர் கடைவீதி, பழைய திண்டுக்கல் சாலை வழியாக கரூர் லைட்ஹவுஸ் முனையில் நிறைவடைந்தது.

திருச்சியில்...

திருச்சி உறையூரில் நடைபெற்ற சைக்கிள் பேரணியை ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் சுரேஷ் தொடங்கிவைத்தார். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டக் குழு உறுப்பினர் சத்யா தலைமையில் மேற்கு பகுதிச் செயலாளர் முரளி, துணைச் செயலாளர் சரண்சிங், பொரு ளாளர் ரவீந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இப்பேரணி நாச்சியார் கோயில், கடைவீதி, சாலை ரோடு, தில்லை நகர், 80 அடி சாலை, விஸ்வப்ப நாயக்கன் பேட்டை தெரு, புத்தூர் ஹைரோடு வழியாகச் சென்று, அக்ரஹாரம் பேருந்து நிறுத்தத்தில் நிறைவடைந்தது. பேரணியை கட்சி யின் மாநில நிர்வாகக் குழு முன்னாள் உறுப்பினர் செல்வராஜ், மாநகர் மாவட்டச் செயலாளர் திராவிடமணி ஆகியோர் முடித்துவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்