திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே யுள்ள கொக்கலாடியைச் சேர்ந்தவர் விமலா(40). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன்(38) என்பவருக்கும் நிலப் பிரச்சினை இருந்துவந்தது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் விமலாவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, விமலா தனது மகன் அரவிந்த் மற்றும் பணியாட்களுடன் சம்பந்தப்பட்ட இடத்தில் வேலி அமைக்கும் பணியில் நேற்று முன்தினம் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, கண்ணன், அவரது அண்ணன் ரவி(45), அண்ணி ரேணுகாதேவி(40), மனோ(30), ராஜா(30) ஆகியோர் அங்கு சென்று, விமலாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதில், இருதரப்பினரும் மோதிக்கொண்டதில் விமலாவுக்கு கத்திக்குத்து விழுந்தது. இதில், அந்த இடத்திலேயே அவர் உயிரிழந்தார். அரவிந்த் படுகாயமடைந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து கண்ணன், ரவி, ரேணுகாதேவி, மனோ, ராஜா ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago