கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் உள்ள அன்னுகுடி பாசன வாய்க்கால் பல ஆண்டுகளாக தூர் வாரப்படாமல் இருந்தது. இதையடுத்து, பேரூராட்சி சார்பில் சிறப்பு தூய்மைப் பணி திட்டத்தின் கீழ் அன்னுகுடி வாய்க்கால் தூர் வாரும் பணியை ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று தொடங்கிவைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: குடமுருட்டி ஆறு முதல் நல்லூர் வரை 5.3 கிலோ மீட்டர் நீளமுள்ள அன்னுகுடி வாய்க்காலில், பாபநாசம் பேரூராட்சி பகுதியில் 2.3 கிலோ மீட்டர் நீளத்துக்கு தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
அப்போது, பேரூராட்சிகள் உதவி இயக்குநர் மாகின் அபுபக்கர், பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன், வட்டாட்சியர் மதுசூதனன், பொதுப்பணித் துறை உதவி பொறியாளர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago