மார்த்தாண்டம் ஆர்டிஓ அலுவலகத்தில் - லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ.1.86 லட்சம் பறிமுதல் ஆய்வாளர், 6 புரோக்கர்கள் மீது வழக்கு :

By செய்திப்பிரிவு

மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத 1 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மோட்டார் வாகன ஆய்வாளர் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், மார்த்தாண்டம் என, இரு வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. சமீபத்தில் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தி, கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்து, வட்டார போக்குவரத்து அலுவலர் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், கோழிப்போர்விளையில் உள்ள மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலையில் தொடங்கி இரவு முழுவதும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.

லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி பீட்டர்பால் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரமா, சிவசங்கரி மற்றும் போலீஸார் இச்சோதனையை நடத்தினர். லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் சோதனையைத் தொடர்ந்து, அலுவலகத்தில் ஆங்காங்கே நின்றுகொண்டிருந்த புரோக்கர்கள் தப்பி ஓடினர். அவர்களில் சிலரை போலீஸார் துரத்தி பிடித்தனர். அலுவலகத்தில் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 1 லட்சத்து 86 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் அலுவலர்களிடம் நேற்று அதிகாலை வரை விசாரணை நடந்தது.

பின்னர் மோட்டார் வாகன ஆய்வாளர் பத்மபிரியா, 6 புரோக்கர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்