கோவில்பட்டி: கயத்தாறில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
உதவி ஆணையர் (கலால்) செல்வநாயகம் தலைமை வகித்தார். அலுவலக கண்காணிப்பாளர் ஆறுமுகச்சாமி முன்னிலை வகித்தார். வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராமசுப்பு வரவேற்றார். பருவமழையின்போது மேற்கொள்ள வேண்டிய பணிகள், தடுப்பு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. மணல் மூட்டைகள், பாதுகாப்பு உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சுபா, வட்டார வளர்ச்சி அலுவலர் அரவிந்தன், கழுகுமலை பேரூராட்சி செயல் அலுவலர் முருகன், கழுகுமலை தீயணைப்பு நிலைய அலுவலர் லிங்கதுரை மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago