திருநெல்வேலியில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அவரது சிலைக்கு திமுக சார்பில் மத்தியமாவட்டச் செயலாளர் அப்துல்வகாப் எம்எல்ஏ., அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர் கணேசராஜா, காங்கிரஸ் கட்சி சார்பில்மாவட்டத் தலைவர் சங்கரபாண்டியன், முன்னாள் மத்திய இணையமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், பாஜக சார்பில் மாவட்டத் தலைவர் மகாராஜன், அமமுக சார்பில் மாவட்டச் செயலாளர் பரமசிவன், மதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர் நிஜாம், தமாகா சார்பில் மாவட்டத் தலைவர் சுத்தமல்லி முருகேசன் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருநெல்வேலி சந்திப்பிலுள்ள தேவர் சிலைக்கு அமமுக சார்பில் மாலை அணிவிக்க அக்கட்சியினர் வந்தபோது இரு தரப்பினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
போலீஸார் தலையிட்டு அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். திருநெல்வேலி வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம் அருகே வந்தபோது மீண்டும் அவர்கள் மோதலில் ஈடுபட்டனர். அங்கிருந்த போலீஸாரும், கட்சி நிர்வாகிகளும் அவர்களை கலைந்துபோகச் செய்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி 3-ம் மைலில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு கனிமொழி எம்.பி. தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்தனர். சண்முகையா எம்எல்ஏ திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். விளாத்திகுளத்தில் எம்எல்ஏ ஜீ.வி.மார்கண்டேயன், கோவில்பட்டியில் எம்எல்ஏ கடம்பூர் செ.ராஜூ, கயத்தாறில் ஊராட்சி ஒன்றியத் தலைவர் எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா உள்ளிட்டோர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago