தூத்துக்குடி சிவன் கோயிலில் - ஐப்பசி திருவிழா தேரோட்டம் :

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேசுவரர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 22-ம் தேதிகொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் மாலையில் பல்வேறுஅலங்காரங்களில், பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதியுலா வரும்நிகழ்ச்சி நடந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று காலை 7 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. காலை10.30 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் தேரில் எழுந்தருளினார்.

இணை ஆணையர் அன்புமணி, கோயில் நிர்வாக அதிகாரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். கீழ ரதவீதியில் இருந்து தேர் புறப்பட்டு நான்கு ரத வீதிகள் வழியாக பகல்12 மணிக்கு நிலையை வந்தடைந்தது. திருக்கல்யாண வைபவம் நவம்பர் 1-ம் தேதி நடைபெறுகிறது.

கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் கோயிலில் ஐப்பசி திருவிழாவின் 9-ம் நாளான நேற்றுமுன்தினம் தேரோட்டம் நடைபெறவேண்டும். ஆனால், கரோனாதடுப்பு வழிகாட்டுதல் காரணமாகதேரோட்டம் நடத்தப்படவில்லை. ஒரே மாவட்டத்தில் உள்ள இருகோயில்களில், இருவேறு நடைமுறைகள் பின்பற்றப்பட்டதால் பக்தர்கள் வருத்தமடைந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்