புதுச்சேரி ஜிப்மரில் தினக்கூலி ஊழியர்கள் 576 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் உணவு வழங்குதல், வெளிப்புற சிகிச்சை, உள்புற சிகிச்சை பிரிவுகள் தொடங்கி பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் நேற்று காலை தங்கள் பணிகளை புறக்கணித்து ஜிப்மர் நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர் போராட்டத்தை தொடங் கினர்.
போராட்டம் வென்றது
இந்தப் போராட்டத்தை தொடர்ந்து தினக்கூலி ஊழியர்களின் இபிஎப் தொகை வருகிற 27-ம் தேதிக்குள் செலுத்தப்படும் என ஜிப்மர் இயக்குநர் உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து ஒருநாள் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தினக்கூலி ஊழியர்கள் தங்களின் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். போராட்டம் தொடர்பாக தினக்கூலி ஊழியர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் செல்லதுரை, பாஸ்கரன், சிவசங்கரன் ஆகியோர் கூறுகையில், “தினக்கூலி ஊழியர்களுக்கு அரசு நிர்ணயித்த தொகையை விட குறைவான ஊதியம் தான் தருகின்றனர்.
அதில் இபிஎப்-க்கு சராசரியாக ரூ.2 ஆயிரம் பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால் இபிஎப் எண் எங்களுக்கு தரப்படவில்லை. இதுதொடர்பாக விசாரித்தபோது, அத்தொகையை 9 ஆண்டுகளாக இபிஎப் அலுவலகத்தில் கட்டாததுதெரியவந்தது. பலமுறை கோரியும் இபிஎப் எண் தராததால் தொடர் போராட்டத்தை தொடங்கியுள்ளோம்” என்று குறிப்பிட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago