விழுப்புரம் ஜானகிபுரத்தில் உள்ள இரு டாஸ்மாக் கடைகளில் மதுபான பாட்டில்களுக்கு ரூ. 20 கூடுதலாக வைத்து விற்பனை செய்யப்படு வதாகவும், அருகில் கிடங்கு ஒன்றில் இருப்பு வைத்து கள்ளச் சந்தையில் விற்பனை செய் யப்படுவதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு புகார் கள் குவிந்தன.
டி எஸ்பி தேவநாதன் தலைமையிலான போலீஸார் நேற்று மாலை அந்த இரு கடைகளுக்கும் சென்று, உட்புறமாக தாழிட்டு சோதனை மேற்கொண்டனர்.
இச்சோதனையில், கணக்கில் வராத பணம் ரூ.31,680 மற்றும் சட்டவிரோதமாக குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ. 6 லட்சத்து 47 ஆயிரத்து 180 மதிப்புள்ள 7 ஆயிரம் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
காட்டுமன்னார்கோவிலில் சோதனை
இதே போல் காட்டுமன்னார் கோவிலை அடுத்த தெற்கிருப்பு பகுதியில் ஒரே இடத்தில் இயங்கி வரும் 3 டாஸ்மாக் கடைகளில் பாட்டில் ஒன்றிற்கு ரூ. 10 கூடுதலாக வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.லஞ்ச ஒழிப்பு துணை கண்காணிப்பாளர் ராஜா மெல்வின் சிங், ஆய்வாளர்கள் திருவேங்கடம், சண்முகம், மாலா ஆகியோர் நேற்று அப்பகுதி கடைகளில் ஆய்வு செய்து, கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 23 ஆயிரத்து 300-யை பறிமுதல் செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago