திண்டுக்கல்லில் நடந்த வங்கி வாடிக்கையாளர்கள் ஒருங்கிணைப்பு முகாமில் பல்வேறு திட்டங்களின் கீழ் 4,100 பேருக்கு ரூ.160 கோடி கடனுதவிகளை அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார்.
திண்டுக்கல்லில் வங்கித் துறை சார்பில் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆட்சியர் ச.விசாகன், மக்களவை உறுப்பினர் ப.வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் ஐ.பெரியசாமி பல்வேறு திட்டங்களின் கீழ் 4,100 பேருக்கு ரூ.160 கோடி கடனுதவிகளை வழங்கிப் பேசியதாவது: ஏழைகள் தனி நபர்களிடம் அதிக வட்டிக்குக் கடன் வாங்கி சிரமப்படக்கூடாது என்பதற்காக வங்கிகள் மூலம் கடனுதவிகள் வழங்கப்படுகின்றன. தொழில் முனைவோர் தாங்கள் பெற்ற வங்கிக் கடன் தொகையை முறையாகப் பயன்படுத்தி தொழில் தொடங்கி, வாங்கிய கடனை முறை யாகத் திரும்பச் செலுத்த வேண்டும், என்றார்.
சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்கள் மற்றும் வங்கிகள் சார்பில் திட்ட விளக்கக் கண்காட்சி நடைபெற்றது. இதில், இந்தியன் வங்கி மதுரை மண்டல துணைப் பொது மேலாளர் எஸ்.பாத்திமா, கனரா வங்கி மதுரை வட்டாரப் பொதுமேலாளர் டி.சுரேந்திரன், திண்டுக்கல் வட்டார உதவிப் பொதுமேலாளர் ஜோஸ் வி.முத்தாத், முன்னோடி வங்கி மேலாளர் பி.மாரிமுத்து, நபார்டு வங்கி உதவிப் பொதுமேலாளர் கே.பாலச் சந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago