‘சம்பா பயிர்களுக்கு தேவையான உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை தேவை’ :

By செய்திப்பிரிவு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஒன்றியக் குழுத் தலைவர் அ.பாஸ்கர் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் பங்கேற்ற ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பேசியபோது, “சாலைகள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், குடிநீர் குழாய்கள் இணைப்புகள், சமுதாயக்கூடங்கள், பேருந்து நிலையங்கள், சேவை மையம், முற்றிலும் சேதமடைந்த தொகுப்பு வீடுகளுக்கு மாற்றுவீடு ஆகிய பணிகளுக்கு உடனடியாக நிதி வழங்கி பணிகளைத் தொடங்க வேண்டும்” என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

ஒன்றியக் குழுத் தலைவர் அ.பாஸ்கர் பேசியபோது, “ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தில் நிதிச் சுமை உள்ளது. நிதியைப் பெறுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிதி கிடைத்தவுடன் உறுப்பினர்கள் கூறிய கோரிக்கைகள் அனைத்தும் முழுமையாக நிறைவேற்றப்படும்” என்றார்.

கூட்டத்தில், சம்பா, தாளடி பயிர்களுக்கு உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான நிதியை உடனடியாக வழங்க வேண்டும். மழைக்கால பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்