காரைக்கால்: காரைக்கால் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை துணை இயக்குநர் எஸ்.சுபாஷ் நேற்று தெரிவித்துள்ளது: பிரதமர் கரிப் கல்யாண் அன்னயோஜனா மற்றும் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் சிவப்பு நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு மத்திய அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட அரிசி ஒரு நபருக்கு தலா 5 கிலோ வீதம் அக்டோபர், நவம்பர் மாதங்களுக்கான அரிசி நெடுங்காடு, திருநள்ளாறு தொகுதிகளுக்குபட்டவர்களுக்கு இன்றும்(அக்.30) நாளையும்(அக்.31) காலை 9 முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 முதல் 5 மணி வரையும் வழங்கப்பட உள்ளது. நிரவி-திருப்பட்டினம், காரைக்கால் வடக்கு, தெற்கு ஆகிய தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் நவ.1 மற்றும் 2-ம் தேதிகளில் காலை 9 முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 முதல் 5 மணி வரையும் வழங்கப்பட உள்ளது. அரிசி விநியோகம் நடைபெறும் மையங்களுக்கு வரும் பயனாளிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருப்பதுடன், தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago